புது மழையில் சிக்கிய சென்னை வாசிகள்

வீடுகளில் புதிய குடியேற்றம்
பாம்பு, பூரான், தேள் !
தெரு ஓரம் சிலர்க் கூடி
எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர்
நானும் அங்கு சென்று பார்த்தேன்
அங்கு தெருவில் தேங்கி நிற்கும்
கணுக்கால் நீரில் ஒரு முதலை
மூச்சு விட திணறியது ......
அருகிலிருந்த ஏறி உடைபட்டு
அடித்து விடப் பட்ட நீர்ப் பிராணி இது
பாவம் மண்ணில் வாழ போராட்டம் ....
வீடுகள் சுற்றி குளமாய்த் தேங்கி நிற்கும்
மழை......திக்கு முக்காடும் மக்கள்
அங்கும் இங்குமாய் சிறு படகுகள் .
மக்களை எங்கோ கொண்டு சேர்க்க !..

இப்படியும் ஓர் மழையா ? அதுவும்
கூட்டுக்கு ஒரு புயல் காற்றுடன் கூட்டணி
தாக்குதலுக்கு சமாளிக்க வழியறியா மக்கள்

மழையே, புயலே கொஞ்சம் கருணைக் காட்டாயோ ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Dec-23, 1:37 pm)
பார்வை : 67

மேலே