கருத்தே கடவுள்
வணக்கம்.
December . 5. 2023
இன்று சென்னை...
இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.
Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.
ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?
எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.
அதை காட்சிப் படுத்தலாமே?
அரசு தன் வேலையை செய்யட்டும்.
வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!
இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்
இரா . செல்வன்