உன் கண்ணில் கலந்து

உன் கண்ணில் கலந்து
×××××××××××××××××××××
உன் கண்ணில் கலந்நு
உள்ளத்தில் காதலனாக மலர்ந்து
உன்னிடம் தொலைத்து விட்டேன்
உன்னதமான என் இதயத்தையே

மாறாத அன்பு தனில்
மறவா திருப்ப வளே
உறவெனும் தடை யுடைத்து
உயிரில் கலந்திட வருவாயே

சிற்பி வடித்த சிலையாக
சிரித்த வடிவான தேவதையே
அற்புத கிளியோபாட்ர ஓவியமானவளே அன்னமாக  அருகே வருவாயோ

அவள் மனைவியாகக் கிடைப்பாள்
என யென் மனம் நினைக்கும்
அது நடக்காது போனால்
இறக்கும் நாளை குறிக்கும்

காதலை சொல்ல உண்டு
குயிலாகப் பாடும் உதடுகள்
சாதலை தடுத்திடு பெண்ணே
சவலாக சொல்லிடு கண்ணே

சம்மதப் புன்னகை வீசினால்
சூரியனும் ஓளிதர திணரும்
சம்சார மானால் வானமும்
சாரல் மழையால் வாழ்த்துமே

என்னைத் தான் கனவன் என்பாள்
என் மடி சாய்ந்து மயங்குவள்
அன்னையாக எந்நாளும் யெனை சுமப்பாள்
அன்பு இறக்கும் வரை குறைவதில்லை..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Dec-23, 9:40 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : un kannil kalanthu
பார்வை : 176

மேலே