புரியும்படி விளக்குவாயா

உன்னை காண பயணிக்கும் நேரமெல்லாம் எண்ணுவேன்
உன்னை கண்டதும் ; உன் முகத்தின் மேல்
கத்த வேண்டும் ; கதற வேண்டும்
உன்னை திட்டி தீர்த்து
உன்னகும் என்னகும் நடுவே
" இனி ஒன்றும் இல்லை" என உறக்க சொல்லி
என் ஆற்றாமை உனக்கு அறிமுகம் செய்து "உன்னை காண இனி வரமாட்டேன்" என திரும்பி நடக்க எண்ணுவேன்...
ஆனால் நீயோ
நீ என்னை கண்ட நொடியில்
என்
புலன்களை முடமாக்கி
வார்த்தைகளை ஊமையாக்கி
தொண்டையை விம்ம செய்து
கண்களை மட்டும் விட்டு வெய்த்தாய்
அது குலமாகி கறை புரண்டு ஓடும்போது
நீயோ உன் புன்சிரிப்பில் நின்ற படி
"என்னை பாரடா , என்னை பாரடா, நன்கு பாரடா " என்பாய்
இது என்ன அர்த்தம்
எனக்கு புரியும்படி விளக்குவாயா??
ஆண்டவா!!
- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (12-Dec-23, 9:41 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 205

மேலே