மனமென்னும் மெல்லிய மௌனத் தோட் டத்தில்

மனமென்னும் மெல்லிய மௌனத்தோட் டத்தில்
தினமும் உலவுகிறாய் தென்றல்காற் றைப்போல்
கனவாய் விரிந்தாய்மென் காதலைத் தந்தாய்
நினைவிலே நித்தமும் நீ

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா பொழிப்பு மோனைப் பொலிவுடன்

மனமென்னும் மெல்லிய மௌனத்தோட் டத்தில்
தினமும் உலவும்நீ தென்றல் -- மனதில்
கனவாய் விரிந்தாய்மென் காதலைத் தந்தாய்
நினைவிலே நித்தமும் நீ

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா
மனமென்னும் மெல்லியஎன் மௌனத்தோட் டத்தில்
தினமும்நீ உலவுகிறாய் தென்றல்காற் றைப்போல்
கனவாய்நீ விரிந்தாய்மென் காதலைநீ தந்தாய்
நினைவினிலே நித்தமுமே நீஎன்பொன் வசந்தம்

----காய் காய் காய் மா கலிவிருத்தம்
கலிப்பாவிற்கு மா நீக்க வேண்டும்

மனமென்னும் மெல்லியஎன் மௌனத்தோட் டத்தினிலே
தினமும்நீ உலவுகிறாய் தென்றல்காற் றினைப்போல
கனவாய்நீ விரிந்தாய்மென் காதலைநீ தந்திடுவாய்
நினைவினிலே நித்தமுமே நீஎன்பொன் வசந்தமாய்

----மா வை காயாக்கி கலித்தளை மிகுந்து வர அமைத்த
தரவு கொச்சகக் கலிப்பா அதே மோனைப்பொலிவுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-23, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே