திருட்டுப்பய போல் ஆக்குற
திருட்டுப் பயபோல் ஆக்குற !!
——
திருட்டுப் பயபோல் ஆக்குற /
தீயா என்னை மாத்துற /
இருட்டும் நேர மோகினி /
இரவு முழுசும் வாட்டுற /
கபடம் இல்லா நெஞ்சிலே /
கள்ளி வந்து குந்தினே /
அபத்தம் எல்லாம் பேசறேன் /
அணைக்க இழுக்கத் துடிக்கிறேன் /
கண்ணசைவில் சம்மதத்தைக் காட்டு /
கண்டாங்கிச் சேலையோடு வாரேன் !!
- யாதுமறியான் .