மரகதவண்ணன்மாயன் மார்கழியின் கண்ணன்

மரகதவண் ணன்மாயன் மார்கழியின் கண்ணன்
அரவுப் படுக்கையில் அஞ்சனன் யோக
அரிதுயில் கொள்வான் அரங்கப் பெருமாள்
வரம்பெற பாடிடுபா வை

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா பொழிப்பு மோனை பொலிவுடன்

பொருட் குறிப்புகள் :--

அரவு ---பாம்பு

அஞ்சனன் ---அஞ்சன வண்ணன் --கண் மை நிறத்தினன்

யோக அரிதுயில் --- யோக நித்திரை
அரிதுயில் கொள்ளும் மாயானது தங்கையே ---அபிராமிப் பட்டர்

வரம்பெற பாடிடுபா வை ----பாடிடு ஆண்டாள் திருப்பாவை
அல்லது பாடிடு உனது பா வை என்றும் கொள்ளலாம்

சிறப்புக் குறிப்பு :
தமிழ் பித்தன் வாசவனார் தன் வெண்பாவில் சொன்ன
மரகத வண்ணன் சொல்லாடல் தூண்டிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-23, 8:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே