குடும்பப் பாரமாய்க் கூற்றந் துரத்திட - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(குறிலீற்றுமா கூவிளம் கூவிளம் கூவிளம்)

விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்;
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு;

(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

குடும்பப் பாரமாய்க் கூற்றந் துரத்திட
இடும்பை தந்திட ஏற்றமும் தாழ்வுமாய்
உடும்பின் கைப்பிடி ஒவ்வொரு நாளுமே
கடும்பித் தாக்கிடக் கண்களில் ஈரமே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-23, 9:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கவிதைகள்

மேலே