குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல்

(இ-ள்) தலைமகன் தலைமகள் மாட்டு உள்ளதும் இல்லதுங் கூறிப் புகழ்ந்து கொண்டாடுதல். ஆயின், உள்ளது கூறுதலும் பொய் பாராட்டலோவெனின்? அற்றன்று. மற்றென்னையெனின்? இல்லது கூறுவான் உள்ளதை விட்டு விடுவானல்லன் என்க.

இதுவுமது

கட்டளைக் கலித்துறை
('கை’ ‘மை’ ’க’ ’ம’ மோனை, ‘ய்’ இடையின ஆசு)

திக்கானை யெட்டும்பின் காட்டிய வாறுஞ் சிலைவி(ந்)தம்போ
யிக்கா கினிபுக் கொளித்திடு மாறு மிரப்பவர்க்குக்
கைக்காம தேனுக் குலோத்துங்க சோழன்,கல் யாணிவெற்பின்
மைக்காவி யங்கண்ணி நின்கொங்கை யான்மன மானி(த்)ததே!10

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (28-Dec-23, 6:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே