தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ

தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ

வானமே நீதேடும் வெண்ணிலா பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
கான அமுதைப் பொழிந்திடும் பூங்குயிலே
தேனிசை யால்இவளைப் பாடு

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா முன்றாம் சீர்
மோனைப் பொலிவுடன்
-----------------------------------------------------------------------------------------------------

வானமேநீ தேடுகின்ற வெண்ணிலாபார் பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடுகின்ற பூஇவளோ
கானத்தேன் சுவையமுதைப் பொழிகின்ற பூங்குயிலே
தேனிசைதன் னால்இவளைப் பாடிடுவாய் நான்ரசிப்பேன்

-----காய் காய் காய் காய் கலிவிருத்தம் மோனை அழகுடன்
------------------------------------------------------------------------------------------------

வானமேநீ தேடுகின்ற வளர்நிலாப்பார் பூமியிலே
தேனருந்தும் இனியவண்டே தேடுகின்ற மலரிவாளோ
கானத்தேன் சுவையமுதைப் பொழிகின்ற இளங்குயிலே
தேனிசைதன் னால்இவளைப் பாடிடுவாய் ரசிப்பேன்நான்

----காய் முன் நிரை நிற்கும் கலித்தளை மிகுந்து
தரவு கொச்சகக் கலிப்பா ஆனது

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-23, 8:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே