இளமையெழில் கொஞ்ச இதழ்புன் சிரிப்பில்

இளவேனில் தென்றல் இனிமையாய் வீச
இளமையெழில் கொஞ்ச இதழ்புன் சிரிப்பில்
வளர்நிலா வானில் வருமிளமா லையில்
சுளைப்பலா செந்தமிழ் பேசு
----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா மூன்றாம் சீர் மோனைப் பொலிவுடன்


இளவேனில் தென்றல் இனிமையாய் வீசிடும் வேளையிலே
இளமை தவழ இதழ்புன் சிரிப்பில் மயக்கிடுவாய்
வளர்நிலா வானில் வரும்போ தினிலே அருகமர்வாய்
சுளைப்பலா செந்தமிழ் பேசிடு செவ்வித ழைத்திறந்தே

----இப்போது இது கட்டளை கலித்துறை ஒரே எதுகை மோனைப் பொலிவுடன்

இப்பாவினத்தின் யாப்பு விதிகள்
--ஐஞ்சீர் நெடிலடிகள் நான்கு
--ஈற்றுச் சீர்களில் விளங்காய்
--இடைச் சீர்களில் வெண்டளைகள்
---ஈற்றடி ஈற்றுச் சீரில் ஏகார ஓசை
---கவிதை நிறையசையில் துவங்கியதால்
ஒவ்வொரு அடியிலும் ஒற்று நீங்கி 17 எழுத்துக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-23, 7:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே