மான்விழி வாராததேனோ
தேன்மலரில் வண்டொன்று தேனுண்டு கண்ணுறங்க
வான்நடந்த வண்ணமிகு வான்நிலா தாலாட்ட
மான்மருண்டு தோட்டத்தில் மாலைநிலா வில்துள்ள
மான்விழிவந் தாள்துள்ளா மல்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
---தே தே , வா வா . மா மா , மா ம ....அதே எழுத்து மோனைகள்
தேன்மலரில் வண்டொன்று தேனுண்டு கண்ணுறங்க
வான்நடந்த வண்ணமிகு வான்நிலா தாலாட்ட
மான்மருண்டு கொஞ்சும் நிலவினில் துள்ளியோட
மான்விழிவா ராததே னோ
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
---தே தே , வா வா -அதே எழுத்து மோனை
---மா நி , மா னோ -- இன எழுத்து மோனை
தேன்மலரில் தேனுண்டு பொன்வண்டு கண்ணுறங்க
வான்நடந்த வண்ணமிகு வெண்ணிலா தாலாட்ட
மான்மருண்டு கொஞ்சும் நிலவினில் துள்ளியோட
மான்விழிவா ராததே னோ
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
----தே பொ ---இன எழுத்து மோனை
----வா வெ --வர்க்க எழுத்து மோனை
---மா நி , மா னோ -- இன எழுத்து மோனை

