செங்காம்பு வெண்மலர் பூவே பவழமல்லி

செங்காம்பு வெண்மலர் பூவே பவழமல்லி
செங்கதிர் காலையில் பாய்விரித் தாய்தரையில்
திங்கள் எடுத்துத் தொடுத்துமா லைமாலே
மங்கையும் தந்தாள் மகிழ்ந்து

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

செங்காம்பு வெண்மலர் பூவே பவழமல்லி
செங்கதிர் காலையில் பாய்விரிக்க --மங்காவெண்
திங்கள் எடுத்துத் தொடுத்துமா லைமாலே
மங்கையும் தந்தாள் மகிழ்ந்து
----ஒருவிகற்ப நேரிசை வெண்பா
---அடி எதுகை மூன்றாம் சீர் இன வர்க்க மோனைப் பொலிவுடன்
வெண்பாவின் இரு வடிவங்கள்

மங்காவெண் திங்கள்- மங்கா வெண்ணிறத் திங்கள நிகர்த்தவள்
மாலே ---திருமாலே

செங்காம்பு வெண்மலர்நற் பூவேசெம் பவழமல்லி
செங்கதிர்பொற் காலையிலே பாய்விரித்தாய் தரையினிலே
திங்களிவள் எடுத்தழகாய்த் தொடுத்தமாலை திருமாலே
மங்கையுமே தந்தாளே மகிழ்ச்சியிலே ஏற்றருள்வாய்

----முற்றிலும் காய் வாய்ப்பாடு கலிவிருத்தம் மோனைப்பொலிவுடன்

செங்காம்பு வெண்மலர்நற் பூவேசெம் பவழமல்லி
செங்கதிர்பொற் காலையிலே பாய்விரித்தாய் தரையினிலே
திங்களிவள் எடுத்தழகாய்த் தொடுத்தமாலை திருமாலே
மங்கையுமே தந்தாளே மகிழ்ச்சியிலே அருள்புரிவாய்

----மாச் சீர் விளங்கனிச் சீர் தவிர்த்த காய் முன் நிரை வரும்
கலித்தளை மிகுந்த மூன்றாம் சீர் மோனைப் பொலிவுடன் அமைந்த
தரவு கொச்சகக் கலிப்பா
காய் முன் நேர் வரும் வெண்டளையும் காய் முன் நிரைவரும்
கலித்தளையும் விரவி வந்ததால் இப்பாவை பிரிந்திசைத் துள்ளல்
ஓசை கொண்ட தரவு கொச்சகக் கலிப்பா என்பர்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-24, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே