நன்மதி வெண்பா - நூல் - பாடல் 12
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தொத்துவார் வல்லுடும்பு சொல்வருட நூறிருக்கும்
பத்துநூ றாண்டுபெரும் பாம்பிருக்கும் - தத்தும்
திரைமடுவிற் பல்காலம் சேர்ந்திருக்கும் கொக்கு
புருடார்த்த நன்மதியே போற்று! 12

