சிவநேச வெண்பா 4

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா

நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
மறப்பி(த்)தாலி யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னாலென் பேசு! 4 1969

எழுதியவர் : வள்ளலார் (5-Jan-24, 10:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே