நாணம் ஓங்கிடும் நங்கையின் புன்னகை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு! (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)
நாணம் ஓங்கிடும் நங்கையின் புன்னகை
சேணம் பூட்டிய செல்லக் குதிரையாய்
பேணு மன்பும் பெருமையுங் காட்டியே
காணும் யாவுங் களித்திட லாகுமே!
- வ.க.கன்னியப்பன்