காதல் பறவையென் காதில் கிசுகிசுக்குது

மலர்க்கதவைத் திறக்கும்
மஞ்சளில வெய்யில்
காலைப் பொழுதில்
மௌனம் கலையும்
மலர்ப்பொழில் தென்றல்
வருகையில்
கனவைக் கலைத்து
துயிலெழுந்து வந்தாய்
காற்றில் குழலாட
காதல் பறவையென்
காதில் கிசுகிசுக்குது
பாடுபாடென்று

எழுதியவர் : KAVIN CHARALAN (8-Jan-24, 7:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே