காதல் கொடி

மயில் போல் தோகை
விரித்தாடி
புன்னகையென்னும்
போர்வாள் கொண்டு
பெண்னொருத்தி
எனைத் தாக்க
காயம் கொண்டேன்
காதலெனும்
போர்க்களத்தில்
மயங்கி வீழ்ந்தேன்

விழித்தெழுந்தேன்
காதல் ஏக்கத்துடன்
என்னருகே
கொடியிடையாள்
காதல் கொடியுடன்
காத்து நின்றாள்

காதல் கொடியை வணங்கி
காதல் போர்க்களத்திலிருந்து
வெற்றி நாயகனாக
வீறுக் கொண்டு நடந்தேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Jan-24, 5:37 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 223

மேலே