வெற்றிலை சிவந்தது

இயல் தரவு இணைக் கொச்சகக் கலிப்பா

எண்ண மெலாந்தான் இன்றும் சிதறவில்லை
என்றும் பசுமரத் தாணியாய் நிற்குதடி

கண்ணே மடித்த கருநாக வல்லியிலை
காலின் நுனிசிதைத்து காம்பு தனைநீக்கி

பண்ணே கமுகின் கொட்டைப் பாக்குத்தூள்
சுண்ண மதுடன் சுவைத்துநீ மென்றதை

பெண்நின் அமுதவாய் பெற்ற சுரப்புநீர்
எச்சில் கலந்தூட்டி எனைமகிழ் வித்தாயே.



------------------------------------------------
பொருள்::
கரு நாக வல்லி = கருப்பு வெற்றிலை

எழுதியவர் : பழனி ராஜன் (10-Jan-24, 5:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே