மானாண்ட மென்விழியால் மங்கைநீ ஆள்வாயோ

மானாண்ட மென்விழியால் மங்கைநீ ஆள்வாயோ
தேனாண்ட பூமலரைப் பூவிதழில் கொண்டாயோ
வானாண்ட வெண்ணிலாவுன் மேனியின் வண்ணமோ
நானாண்ட பாநீதா னே

-------ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
மோனை ---மா ம ,தே பூ . வ மே , நா னே

மானாண்ட மென்விழியால் மங்கைநீயும் ஆள்வாயோ
தேனாண்ட பூமலரைப் பூவிதழில் கொண்டாயோ
வானாண்ட வெண்ணிலாவுன் மென்மேனி வண்ணமோசொல்
நானாண்ட பாநீதா னேஎந்தன் கவித்தலைவி

----முற்றிலும் காய் நிறை கலிவிருத்தம்


மானாண்ட எழில்விழியால் மங்கைநீயும் ஆள்வாயோ
தேனாண்ட நறுமலரைப் பூவிதழில் அணிந்தாயோ
வானாண்ட நிலாவுந்தான் மலர்மேனி உலவுதோ
நானாண்ட தமிழ்ப்பாவே நீதானே கவித்தலைவி

----காய் முன் நிரை கலித்தளை மிகுந்து வந்த தரவு கொச்சகக் கலிப்பா
மாச் சீர் விளங்கனிச் சீர் நீங்கி அமைந்தது
அளவடி நான்குடன் ஒரு தரவு பெற்று கலித்தளை வெண்டளை விரவி வந்ததால்
அகவல் துள்ளல் ஓசை இப்பாவின் ஓசை
பழைய நூல்களில் பெருவாரியாக பயன் படுத்தப் பட்டது இவ்வழி வடிவே
என்பது அறிஞர்களின் கூற்று
----மானா தேனா வானா நானா ---எதுகை னா ஒரே ஓசை முதலெழுத்து
நெடில்
மோனை 1 3 ஆம் சீரில் மா ம , தே பூ , வா ம , நா நீ

யாப்புக் குறிப்புகள் பயில்வோருக்கு பயன் தரலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-24, 6:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே