வருகிறாள்பார் வண்ணப்பாவை
தெருவந்த பார்த்தபூந் தென்றலுக்கே மாற்றம்
கருங்கூந்தல் புன்னகையாள் கார்குழலி இல்லை
இருக்கின்ற பூந்தோட்ட இன்மலரும் வாட
வருகிறாள் தேவிய வள்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகை : தெரு கரு இரு வரு
1 3 ஆம் சீரில் மோனை பொழிப்பு மோனை
---தெ தெ , க கா , இ இ , வ வ --அதே எழுத்து மோனை
தெருவந்த பார்த்தபூங் காற்றுக்கே மாற்றம்
கருங்கூந்தல் புன்னகையாள் பூங்குழலி இல்லை
இருக்கின்ற தோட்ட எழில்மலர்கள் வாட
வருகிறாள் வண்ணப்பா வை
இங்கே இன எழுத்து மோனைகள் --தெ கா ,க பூ, இ எ,வ வை .
===============================================================
தெருவந்த பார்த்தபூங் காற்றுக்கே மாற்றமந்தோ
கருங்கூந்தல் புன்னகையாள் பூங்குழலி இல்லையின்று
இருக்கின்ற பூந்தோட்ட எழில்மலர்கள் வாடிடவும்
வருகிறாள்பார் வண்ணப்பா வைபூமென் கொடிபோன்று
----காய் செறிந்த கலிவிருத்தம்
===================================================================
தெருவந்த பார்த்தபூங் காற்றுக்கே மாற்றமந்தோ
கருங்கூந்தல் புன்னகையாள் பூங்குழலி இலையின்று
இருக்கின்ற பூந்தோட்ட எழில்மலர்கள் வாடிடவும்
வருகிறாள்பார் வசந்தப்பா வைபூமென் கொடிபோன்று
-----காய் முன் நிரை வரும் கலித்தளை மிகுந்து வர அமைந்த
அளவடி ஒரு தரவால் ஆன தரவு கொச்சகக் கலிப்பா
தளைகளால் அறியப்படுவது ஓசை
வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்ததால்
இதன் ஓசை அகவல் துள்ளல் ஓசை