கடலலைகள் தன்னில்மென் கவிதைபாடும் இளம்தென்றல்
பா :
கடலலைகள் தன்னில் கவிதைபாடும் தென்றல்
தொடுவான ஆதவனைத் தொட்டிடும் நீலம்
கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன்கை கோர்த்து
நடந்தமாலை தன்நினைவில் நான்
---பதிந்த ஒருவிகற்ப இன்னிசை வெண்பா + எதுகை மோனை அழகு
பாவினம் :-
கடலலைகள் தன்னில்மென் கவிதைபாடும் மென்தென்றல்
தொடுவான ஆதவனைத் தொட்டிடுமே கடல்நீலம்
கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன்கை கோர்த்தவாறு
நடந்தமாலை தன்நினைவில் நானின்றும் நடக்கின்றேன்
---இப்பொழுது முற்றிலும் காய் செறிந்த கலிவிருத்தம்
பா :
கடலலைகள் தன்னில்மென் கவிதைபாடும் மென்தென்றல்
தொடுவான ஆதவனைத் தொட்டிடுமே கடல்நீலம்
கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன்கை கோர்த்தவாறு
நடந்தமாலை தன்நினைவில் நான்பார்
-----ஈற்றடி வெண்பா போல் முச் சீரால் அமைந்துள்ளது
ஆதலால் இது வெண்கலிப்பா
பொதுவாக கலிப்பா மாச் சீரும் விளங்கனிச் சீரும் ஏற்காது
விதிவிலக்காக ஈற்றடியில் மட்டும் வெண்கலிப்பாவில் மாச் சீர்
வரலாம் .நான்பார் --நேர் நேர் --தேமா
மீண்டும் பா :
கடலலைகள் தன்னில்மென் கவிதைபாடும் இளம்தென்றல்
தொடுவான ஆதவனைத் தொட்டிடுமே கடல்நீலம்
கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன்கை கோர்த்தவாறு
நடந்தமாலை தன்நினைவில் நானின்றும் நடக்கின்றேன்
----கலித்தளை மிகுந்த அளவடி நான்கு ஒரு தரவு கொண்ட
தரவு கொச்சகக் கலிப்பா + அதே எதுகை மோனை அழகுடன்