அவள்

அவள் எனைப் பார்த்தாள் மூடிய
இதழ்களோரம் கபடம் ஏதுமிலா விஷமம் சொட்ட
நான் அவளோடு பேசி பார்த்தேன் புரிந்துகொண்டேன்
அது அவள் கள்ளமில்லா சுவபாவம்


அவள் செவ்விதழ்கள் விரிய சிரித்தாள்
அந்த சிரிப்பில் ஓர் கிண்கிணி ஓசைக்
கேட்டேன் ஓர் நாட்டிய நங்கையின் சலங்கை ஒலியாய்.
ஒய்யாரமாய் அன்ன நடைபோட்டு வந்தாள் அவள்
அவள் கைகளின் வளையல்கள் ஜதி ஸ்வரம் பாட
என் உள்ளம் கவர்ந்தாள் வனிதா மணியாய் அவளே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-Jan-24, 7:03 pm)
Tanglish : aval
பார்வை : 162

மேலே