அவள்
அவள்.
பாசம் தெரியும்
அவள் கண்களில்
கவலைகள் மறையும்
அவள் புன்னகையில்
புத்துயிர் பெறும் மனம்
அவள் அரவணைப்பில்
குயில்கள் கூடும்
அவள் மொழி கேட்க
மயில்கள் ஆடும்
அவள் பாடல் கேட்டு
சந்திரன் வருவான்
அவள் முகம் பார்க்க
சூரியன் மறைவான்
அவள் முகஒளி கண்டு
இவளுக்கு பெயரு
அம்மா
இதுவே அவளுக்கு
பிடித்த பெயரு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.