பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

அறுவடை முடித்து கதிர் அடித்து நெல் எடுத்த கைக்கொண்டு
ஆதவனுக்கு படைக்கப் புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி
இனிய சக்கரை பொங்கலையும் வெண் பொங்களையும் பொங்கி வைத்து
ஈசனுக்கு நன்றாக விளைந்த நிலத்தினை அளித்ததற்கு நன்றி கூறி
உடுத்திய புத்தாடையுடன் அழகான கோலமிட்டு விளக்கேற்றி
ஊரெல்லாம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாள் இதனில்
எல்லோரும் கூடித் தைத் திங்களால் வழிபிறந்ததென குதூகலித்து
ஏர் ஓட்டிய கைகூப்பிக் கொண்டு சூரிய பகவானைத் தொழுது
ஐங்கரனை மனதில் இருத்தி இந்நாளில் பக்தியோடு வணங்கி
ஒவ்வொரு நாளும் இவ்வாறு சிறப்பாக அமைய வேண்டுமென
ஓம்மென்னும் பிரணவத்தை உள்ளத்தில் உறுதியாக்கி அமர்த்தி
ஒளவைத் தமிழில் துதித்துப் பாடி குவலயம் கொண்டாடும்
இத்தமிழர் திருநாளில் பொங்கலோ பொங்கல் எனக் கூவிடுவோமே

எழுதியவர் : கே என் ராம் (14-Jan-24, 8:48 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongal thirunaal
பார்வை : 60

மேலே