புள்ளிகள் இட்டுப் புதுக்கோலம் தீட்டிடும் விழியினள் பார்க்கிறாள்
புள்ளிகள் இட்டுப் புதுக்கோலம் தீட்டிடும்
துள்ளிடும் மானினம் தோற்கும் விழியினள்
அள்ளிடும்நம் நெஞ்சை அவளழகு பார்க்கிறாள்
புள்ளின மாமயிலைப் பார்
-------ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
புள்ளிகள் இட்டுப் புதுக்கோலம் தீட்டிடும்
துள்ளிடும் மானினம்தோற் கும்விழியாள் -துள்ளிட
அள்ளிடும்நம் நெஞ்சை அவளழகு பார்க்கிறாள்
புள்ளின மாமயிலைப் பார்
----ஒரு விகற்ப நேரிசை வெண்பா
புள்ளின --பறவை இன
எதுகை :- புள் துள் அள் புள்
மோனை --பு பு . து தோ(வர்க்கம்), அ அ , பு பா ( வர்க்கம் ).
1 3 ல் மோனை பொழிப்பு மோனை
=====================================================================
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா
---ஒளவையின் நாமறிந்த இரு விகற்ப நேரிசை வெண்பா
எதுகை :-பாலு ,நாலு , துங்க சங்க --- கோல --தனிச் சொல் எதுகைகள்
மோனை :- பா பா , நா நா து தூ அதே எழுத்து மோனை ச தா --இன மோனை
--பொங்கல் நன்னாளில் துங்கக் கரிமுகத்துத் தூமணி ஆணை முகனின்
தாள் பணிந்து ஒளவைபோல் தேனும் பாலும் பாகும் கலந்தாற்போல்
எதுகை மோனை எழிலுடன் இனிய வெண்பாக்களை
சங்கத் தமிழில் எழுதும் பேறு நாமும் பெறுவோம்