மதியெழில் மங்கை தனுடனே கொண்டாடுவான் பொங்கலே
கதிர்விரி காலைப் பொழுதினில் செம்மண் கலயத்திலே
கதிர்நெல் அரிசியை இட்டு புதுப்பொங் கலாக்கியபின்
கதிரவன் முன்கரும் பும்மஞ்சள் மென்கொலை தன்னைவைத்து
மதியெழில் மங்கை தனுடனே கொண்டாடு வான்பொங்கலே
---ஐஞ்சீர் நெடிலடியால் அமைந்த கட்டளைக் கலித்துறை
எதுகை ::- கதி கதி கதி மதி
ஐஞ்சீர் கொண்ட இப்பாவினத்தில் 1 5 ஆம் சீரில் மோனை அமைய எழுதுவர்
தொன்னூல் எடுத்துக் காட்டு ----அபிராமி அந்தாதி
இங்கும் 1 5 ல் மோனை க க க க க த ம வா
இது ஐந்து நெடிலடி கொண்ட கலித்துறையின் சற்று மாறுபட்ட பாவினம்
இடையே வெண்டளை அமைய வேண்டும்
ஈற்றுச் சீர் விளங்காய் சீர் வரவேண்டும் குறைவாய் மாங்கனிச் சீர் வரலாம்
இடைச் சீர்களில் விளங்காய் வரக்கூடாது
கவிதை நேரசையில் துவங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்து வரவேண்டும்
கவிதை நிறையசையில் துவங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்து வரவேண்டும்
இங்கே 17 அமைந்து வந்துள்ளது
கவிதை ஈற்றுச் ஆசிரிய ஓசையில் முடிய வேண்டும்
இங்கே வான்பொங்கலே ---ஈற்றுச் சீர்