நற்றமிழ் நாவினில் நல்லதோர் வீணையடி

நற்றமிழ் நாவினில் நல்லதோர் வீணையடி
சொற்றமிழைத் சொல்லிடும் சொல்லிதழால் மீட்டடி
பெற்றிடுவோம் பேருவகை பேரெழில் காதலி
கற்போம் தமிழ்த்தேன் கவி

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எதுகை :- நற் சொற் பெற் கற் ---ற் ஒற்று எழுத்து இங்கே எதுகை

1 3 ல் சீர் மோனை --ந ந --சொ சொ அதே பெ பே வர்க்கம் க க அதே
பொழிப்பு மோனை அல்லது 1 3 ஆம் சீரில் மோனை அமைய
பா வடிப்பது தொன்நூலார் பின்பற்றிய வழக்கம்
----ந நா ந
---சொ சொ சொ
---பெ பே பே
---க த க
எல்லா அடிகளிலும் 1 2 3 ஆம் சீர்களில் மோனை அமைந்திருப்பதையும் கவனிக்கவும் இதை கூழை மோனை என்பர்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-24, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 113

மேலே