நன்மதி வெண்பா - நூல் - பாடல் 17

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

எத்தருணத் தெம்மொழிக ளேற்குமோ வம்மொழிகள்
அத்தருணத் திற்புகன்றும் அந்நியர்தம் - சித்தமது
நோதலின்றித் தாநோவா நோன்மையன்றோ நன்மதியே
ஏதமிலாச் சான்றோர் இயல்! 17

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (13-Jan-24, 2:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே