தமிழர் திருநாள் -- நேரிசை ஆசிரியப்பா

தமிழர் திருநாள் -- நேரிசை ஆசிரியப்பா
************

தென்தி சையில் ஆதவன் நகர,
ஆடிப் பட்டம் நெற்பயிர் விதைப்பர் !
சூரியன் அவனும் மாறியே நகர,
தையது பிறந்து நல்லவை நடக்கும்!
நோற்ற நெல்லும் நன்கு ஓங்கி ;
ஆற்றும், மாந்தர் தம்பசிப் பிணிதனை!
பிறந்த தையைப் போற்றும் நோக்கில் ;
பொங்கல் வைப்பராம் தமிழர் ;
இன்பம் பொங்கும் நாளெனக் கருதியே !
********

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Jan-24, 8:14 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 129

மேலே