பொங்கல் தமிழர் திருநாள்

நேரிசை ஆசிரியப்பா


உழவரின் திருநாள் என்பார் உண்மையை
உரைப்பேன் கேள்மின் பாரதக் கழனி
வாழுழ வுத்தமிழர் தையில் சூரிய
வணக்கம் செய்யும் நாளென படைத்தார்
தமிழை பேசும் முஸ்லீம் கிருத்துவத்
தமிழரும் மகிழார் பொங்கல் நாளில்
தமிழக தெலுங்கு மக்களும் கன்னட
மலையாளி களுமே பொங்கல்
கொண்டா டாப்புறக் கணிப்பார் உண்மையிதே

சிவன்மால் தன்னை கும்பிடு தமிழரே
சிறப்பாய் கொண்டா டும்திரு விழாவாம்
சீர்மிகு பொங்கல் திருவிழா
சிறப்பிது அறிவீர் எந்தமிழ் மக்களே


பூமியும் வடக்குத் தெற்கு அச்சை
மாற்றும் போது பூமிக்கு கேடெதும்
விளையக் கூடா வென்று தமிழர்
கண்டு கொண்டபின் சூரியப்
பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்வதே




.......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jan-24, 12:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 120

மேலே