புதுமலர் புன்சிரிப்பே புத்தம் புதுநிலா

குறட்பா தொடை எழில்கள் :--
------------------------------------------------
தொடை என்பது எதுகை மோனையால் அமையும் யாப்பழகுகள்
குறட்பா வெண்பாவின் ஈரடியால் அமையும் பா வகை
1
புதுமலர் புன்சிரிப்பே புத்தம் புதுநிலா
புத்தகம் போல்நீ சிரி

--இருவிகற்ப இன்னிசை வெண்பா
--முதலடியில் பயில்வது அனைத்து சீரிலும்
முதலெழுத்து பு பு பு பு ---முற்று மோனை

--இரண்டாம் அடியில் பு போ சி ----இன மோனை
--க ச த த ப ற -----வல்லினமாம் ----பள்ளி இலக்கணம்
2 .
பித்தன் பிறைசூடன் பெண்ணெழிலைப் பாதிமேனி
வைத்தான் பெயர்நெஞ்சில் வை

எதுகை ---பித் குறில் ஒற்று வைத் நெடில் ஒற்று
ஆதலால் இது த் இருப்பினும் இதை இரு விகற்பமாய்
கருத வேண்டும்

மோனை :பி பி பெ பா ---ப வர்க்க முற்று மோனை --1 ஆம் அடி
--------------வை வை மோனை ---2 ஆம் அடி
3 .
பித்தன் பிறைசூடன் பாதிமேனி பெண்ணெழில்
சித்தன் மலர்த்தாள் பணி

எதுகை --பித் சித் இரண்டும் குறில் ஒற்று
ஆதலால் இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மோனை --- பி பி பா பெ ----ப வர்க்க முற்று மோனை
--------------------சி ப ----இன மோனை

ஓசை : வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும்
விரவி வந்ததால் இக் குறட்பாக்களின் ஓசை
ஒழுகிசை செப்பல் ஓசை

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-24, 8:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே