உறவுகளை மதிப்போம்
உறவுகளை மதிப்போம்
கண்ணனுக்கும் கௌரிக்கும் திருமணம் முடிந்து சிலவருடங்கள் சென்றபின் குழந்தை வரம் வேண்டி பல கோவில்களுக்கு சென்று வேண்டுதலின் பலனாக பிறந்த முதல் பிள்ளை மூர்த்தி.அவனிடத்தில் இருவருக்கும் மிகுந்த ஆசையும் அன்பும் இருந்தது.அவனை தனது மடியிலும் தோளிலும் சுமந்து தரையில் கால் படாமல் வளர்த்தனர். மூர்த்திக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது கௌரி மீண்டும் கருத்தரித்தாள்.பிள்ளை பேறு வரும் நாள் வரை கண்ணன் அவளையம் மூர்த்தியையும் மிக பத்திரமாக பாதுகாத்தான். வேலைகளுக்கு நடுவில் வீட்டிற்கு வந்து அவர்களை கவனித்து விட்டு பின் அலுவலகம் செல்வான்.
ஆண்டவனிடம் தனக்கு ஒரு பெண் வேண்டும் என மனம் உருகி பிராத்தனை செய்து வந்தான்.அதன் பலனாக பிறந்தவள் ரேவதி.
அதனால் தான் ரேவதியிடம் மூவருக்கும் மிகந்த ஈடுபாடு. தங்கள் உயிரையே அவளிடம் வைத்திருந்தனர். ரேவதியும் மூர்த்தியும் வளர்ந்து பள்ளி,கல்லூரி என்று படிப்பை தொடர்ந்து திருமண வயதை எட்டினர்.கண்ணனும் கௌரியும் அவர்களின் வளர்ச்சியை கண்டு பூரித்தனர். வயது முதிர்ச்சியால் இருவரும் குழந்தைகளிடம் தங்களது வீட்டையும் வருமானத்தையும் கொடுத்து விட்டு முதியோர் இல்லத்தில் வாழ ஆரம்பித்தனர் மூர்த்திக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்வதை பற்றி முதியோர் இல்லத்தில் அவர்கள் யோஜனை செய்யும் வேளையில் மூர்த்தி ஒருநாள் அவர்களிடம் ஜெயா என்ற ஒரு பெண்ணை பற்றி கூறி அவளையும் அழைத்து வந்து அவர்களுக்கு அறிமுகப் படுத்தினான். அவளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விட்டு வீட்டிற்கு சென்றான். கண்ணனும் கௌரியும் அவனிடம் ஜெயாவை பற்றி அவர்களின் கணிப்பை கூற நேரம் கொடுக்காததால் ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என மனதார வேண்டி கொண்டனர். திருமணத்தை மிகச் சிக்கனமாக நடத்தி மூர்த்தி அவர்களின் ஆசியுடன் குடும்பத்தை நடத்த ஆரம்பித்தான். ரேவதியும் ஜெயாவும் ஒரே வீட்டில் வாழும் நிலைமை வந்தது. ஜெயாவை மரியாதையோடு
ரேவதி நடத்தினாலும், குடும்பத் தலைவி என்ற பொறுப்பை வைத்து அவளிடம் ஜெயா சில நேரங்களில் சிறிது கடுமையாகவே நடந்து கொண்டாள். மூர்த்தியையும் தனது பிடியில் வைத்துக் கொண்டு ரேவதியின் முழு சுதந்திரமான வாழ்க்கையைக் கடினமாக்கி வீட்டில் ஒரு பிரிவை உண்டாக்கினாள். மூர்த்தியும் ஜெயா சொல்லுகிறதை கேட்டு அதை உடனே செயலாக்கினான்.ரேவதியிடம் நீ ஏன் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழக்கூடாது என்று ஒரு நாள் கூற அவள் ஆகட்டும் அண்ணா சிறிது அவகாசம் கொடுங்கள் எனக் கூறினாள். ஜெயாவின் அன்றாட வற்புறுத்தலால் மூர்த்தி மோகன் என்ற ஒரு சிறிய மளிகை கடை வைத்திருக்கும் ஒரு சாமானியமானவரை கூப்பிட்டு ரேவதிக்கு மணமுடிக்க
ஏற்பாடுகள் செய்து அதை கண்ணனிடமும் கௌரியிடமும் தெரிவித்தான். அவர்களை பேச விடாமல் சம்மதிக்க வைத்தான். ரேவதியால் ஜெயாவையோ அண்ணாவையோ எதிர்த்து பேச முடியவில்லை. ஜெயாவின் கடுமையான சொற்களில் இருந்து விடுதலை கிடைப்பதை எண்ணி அவளும் திருமணத்திற்கு சம்மதித்து மணமுடித்த பின் தன் அப்பா அம்மாவிடம் சென்று ஆசி பெற்றாள். அவர்கள் அவளை மனமார வாழ்த்தி விட்டு தங்கள் இயலாமையை வெளியிட ரேவதி எல்லாம் இறைவன் சித்தம் எனத் தன்னை தேற்றிக்கொண்டு கணவனின் வீட்டிற்கு சென்றாள். அண்ணா தங்கை இடையே கருத்து வேறுபாடும் பேச்சு வார்த்தையும் இல்லாமல் வருடங்கள் உருண்டோடின. ரேவதி ஓரிரு முறை பிறந்த வீட்டிற்கு தனியாக வந்து மூர்த்தியையும் ஜெயாவையும் கண்டு உதவி கேட்க இருவரும் பார முகமாகி அவளை அவமானப்படுத்த அவர்களிடம் இனி அவர்களை சந்தித்தால் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின் என்று ஒரு சூல் உரைத்து சென்றாள். மூர்த்திக்கு அவளை அவ்வாறு பேசியதில் வருத்தமாக இருந்தது. அவனால் ஜெயாவை எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனை அன்புடன் நல்லவனாக வளர்ப்பதில் மனதைச் செலுத்தினான். மாதங்கள் வருடங்களாகுகி நாட்கள் பறந்து ஓடிவிட்டது. அண்ணன் தங்கை இடையே பேச்சு வார்த்தைகள் இல்லை.
இந்த நாட்களில் ரேவதிக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது அறிந்தும் ஜெயாவின் சொல்லுக்கு பயந்து அதை மனதிலேயே புதைத்து வைத்தான். பல வருடங்கள் கழிந்து தொலைபேசியில் அண்ணனின் குரல் கேட்டவுடன் மனதில் ஒரு துடிப்பு கண்களில் கணங்களில் நீர் வழிந்தது. தன்னை அவன் அழைத்தவுடன் அவளையும் அறியாமல் சரி என வார்த்தைகள் வெளிவந்த.து
இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தாள் ரேவதி. வாடகை காரில் இருந்து இறங்கியதும், அந்த தெருவில் உள்ளவர்கள் அவளை ஆச்சரியமாகப் பார்த்த போது,அவர்களைப் பார்த்து பொதுவாக சொன்னாள் "இது வாடகை கார் தான் சீக்கிரமா சொந்த கார் வாங்கிவிடுவேன்" என்றவளை பார்த்து . யாரும் பதில் பேசவில்லை.
ஒரு மூதாட்டி மட்டும் "சரி கண்ணு.நீ நல்லபடியா இருந்தா சந்தோஷம் தான், உள்ளே போய் உங்க அண்ணியை பாரு" என்றாள் .
தான் பிறந்த அந்த வீட்டை கண்களால் அளந்தபடியே உள்ளே சென்றாள்.அண்ணனின் மகன் அருகில் வந்து "வாங்க அத்தை . எப்படி இருக்கீங்க?"என்னவனை ஏற இறங்க பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாமல் அவள் இருக்க , எங்கோ வெளியே சென்று விட்டு வந்த அண்ணன் மூர்த்தி உள்ளே வந்து "வா ரேவதி நல்லா இருக்கியா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? ஏதோ இத்தனை நாள் பேச முடியாம போச்சு. அதனால என்ன? இப்போ தான் எல்லாம் சரியா போச்சே. நீ மொதல்ல வந்து அண்ணிய பாரு. அவதான் பொலம்பறா." அண்ணனின் பின்னால் சென்றாள். அந்த பெரிய அறையில் இருந்த பெரிய கட்டிலில் படுத்த படுக்கையாக படுத்திருந்தாள் ஜெயா. இவளைப் பார்த்ததும் கண்களில் ஒரு மின்னல் தெரிந்தது. அது பொறாமையா,ஆவலா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
ஜெயாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றிட நடந்தவைகள் திரை படம் போல மறுபடியும் மனத்திரையில் விரிந்தது
இப்படி தான் எப்போதும் அவள் என்ன நினைக்கிறாள், என்ன சொல்லுவாள் என்று யாருக்கும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவள் சொல்வதுதான் எல்லா சபையிலும் அரங்கேறும்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மூர்த்தியையும் முடிந்து கொண்டாள். அண்ணனும் அவளுக்கு சத்யமூர்த்தியாகவே இருந்தான். உடன் பிறந்த தங்கை யுடன் அவளுக்கு தெரியாமல் கூட பேசமாட்டான். பாசம் இருந்தாலும்அதை தேய்ப்பான் கொண்டு தேய்த்துக் கொண்டே இருந்தான்.
இன்றும் கூட. ஏனென்றால் உடன் பிறந்த பாசம் உடனே உடனே வளர்ந்து விடுகிறதே!
ஜெயா வந்ததும் தாய் தந்தையிடம் சொல்லி ( மிரட்டி) ஒரு சாதாரண
மளிகைக்கடை வைத்திருக்கும் மோகனுக்கு கட்டி கொடுக்க செய்தாள்.
அதன் பிறகு ஒரு சீர் செனத்தி ஏதும் செய்ய முடியாது என்று சண்டை போட்டு விட்டு சென்றாள்.
மோகனும், அவன் வீட்டு ஆட்களும் நல்லவர்களாக இருந்ததால் ரேவதி
பிழைத்தாள். அதற்காக மாடு போல உழைத்தாள்.
தாய் , தந்தையின் கடைசி நாட்களுக்கு சென்றவள் தான்
அதன் பிறகு அவளை அழைக்க யாருக்கும் மனதில்லை. 'தாயின்
நகைகள் மகளுக்கு' என்று யாரோ சொல்ல அடிக்காத குறையாக
ஜெயா எல்லோரையும் விரட்டினாள்.
அதன் பிறகு பல வருடங்கள் கழித்து கடை விரிவாக்கத்திற்கும் குழந்தைகள் மேற்படிப்பிற்கும் மடியேந்தி வந்தவளை படியேறக் கூட விடாமல் விரட்டினாள். அன்று வாசலில் நின்று " இனி நீயே வருந்தி கூப்டாதான் வருவேன். அதுவும்
பணக்காரியா. உலகத்துல மனுசங்க விட உனக்கு பணம் தான் உசத்தி இல்ல. என்னைக்காவது ஒரு நாள் இது ஒரு பாடம் கத்து தரும். அப்போ நான் வருவேன்" என்று சொல்லி விட்டு சென்றாள்.
தாய், தந்தை இருக்கும் வரைதான் பிறந்த ஊரும், வீடும் நம்மோடு
உறவாடும். பின்பு அதை மிதிக்க கூட அனுமதி என்பதின் " சாவி" யாரிடமோ சென்று விடுகிறது.' பாவப்பட்ட ஜென்மங்கள் பெண்கள்' என்று நினைத்து கொண்டு கண்களில் நீருடன் சென்றவள் தான்.
இதோ இந்த ஒரு மாதமாக வருந்தி, வருந்தி எல்லோரும் போனில்அழைத்ததாலும், முடியாமல் இருக்கும் நேரத்திலாவது ஜெயாவை
பார்க்க வேண்டுமே என்பதாலும் வந்தாள். யாரும் உடன் வரவேண்டாம்
என்று சொல்லி விட்டு வாடகைக் கார் அமர்த்தி கொண்டு வந்தாள்.
கட்டிலின் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து கொஞ்சம்
தள்ளி போட்டு கொண்டு அமர்ந்தாள்.அண்ணியை பார்த்தாள். நாடி
நரம்பு தளர்ந்து அடங்கி, ஒடுங்கி படுத்திருந்தாள். ஆடிய ஆட்டமென்ன?
இன்றைய நிலை என்ன? பாவம் தான் என்று நினைத்து கொண்டாள். "சாப்பிடு ரேவதி" என்றாள். " நான் சாப்பிட்டாச்சு "
" ஏங்க! தண்ணீயாச்சும் அவளுக்கு குடுங்க"என்று கணவனிடம் அவள் சொல்ல," வேண்டாம். வேண்டாம் தாகமாக இருக்கும் போது தான் தண்ணி வேணும்.தண்ணீலையே இருக்கும் போது எதுக்கு தண்ணீர் ? என்னை எதுக்கு
வரச் சொன்னிங்க" என்றாள் இயந்திரமாக.
" நான் உனக்குத் துரோகம் செஞ்சிட்டேன். மூன்று வீடுகள் , நிலம்,நகை எல்லாமே நானே எடுத்துக் கிட்டேன். இப்போ ஒரு வருசமா படுத்த படுக்கை. நம்ம வள்ளியூர் ஜோசியர் சொன்னாரு வீட்டு பொண்ணுக்கு எவ்வளவு நல்லது செய்யறையோ அவ்வளவுக்கு உனக்கு ஆரோக்கியம், ஆயிசு என்று. உனக்கு என்று நான் இதுவரைக்கும் ஏதும் செய்யலை தான். இனிமேலாச்சும் எதாவது செய்யலாமே
அவள் முடிக்கும் முன் நாற்காலியை விட்டு எழுந்தாள். " நான் புள்ளைங்க படிப்புக்கும், கடைக்கும் கொஞ்சம் பணம் கடனா கேட்டப்ப, எனக்கு குடுக்க மனமில்லாத பணம் உங்க உயிருக்காக பயந்து குடுத்தா உடனே நான் வாங்கிக்கிட்டு சந்தோஷப்படுவேன் என்று நெனச்சீங்களா? பணமும் தண்ணி
மாதிரி தான். தாகம் எடுக்கும் போது தண்ணி குடிச்சே ஆகனும். அதேபோல அவசியமா பணம் வேணும் ன்னு சூழ்நிலை இருந்தா எப்படியாவது பணத்தை தேடிப் போகத்தான் வேணும். அப்படி ஒரு நிலைமையிலே கதறிக் கிட்டு உங்க கிட்ட கேட்டப்போக் குடுத்திருந்தா உங்களை கடவுளா மதிச்சிருப்பேன். ஆனா இப்போ என் கிட்ட தண்ணி மாதிரி
பணம் இருக்கு. இப்போ நீங்க எவ்வளவு குடுத்தாலும் அதுக்கு மதிப்பில்லை . நாங்க கஷ்டப் பட்டு முன்னேறி சாம்பாதிச்ச பணம் நிறைவா எங்ககிட்ட இருக்கு.
அதுவே எங்களுக்குப் போதும். எங்க அப்பா பணமானாலும் அது இப்போ உங்க பணம். அது எனக்கு வேண்டாம்.
பொண்களுக்கும் சொத்துல பங்கு இருக்குன்னு சட்டம் கொண்டு வந்தாலும், அதை அவங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று வீட்டில் ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு.அது யாருக்கும் தெரியாது.
அதை சட்டத்தால் கட்டாயபடுத்தி வாங்க முடியும் தான் ஆனா மனசுக்குள்ள இருக்கிற உண்மையான பாசம் அதுக்கு சம்மதிக்காது. மொதல்ல உடைஞ்ச உறவு திரும்ப ஒட்டினாலும் விரிசல் வெளியே தெரியத்தான் செய்யும்.
உங்க உடம்புக்கும், என் மனசுக்கும் பணத்தால எந்த சம்மந்தமும் வேண்டாம். நான் போய்ட்டு வரேன் என்று திரும்பி பார்க்காமல் வந்து காரில் ஏறி அவள் ஊருக்கு புறப்பட்டாள்.
அங்கே உள்ளே ஜெயா கதறுவது தெருவரைக்கும் கேட்டது. எதை எதை
எப்போது செய்யவேண்டுமோ அதை அதை அப்போதே செய்ய வேண்டும்.
இல்லை என்றால் அது திரும்பவும் வேறு விதமான அனுபவமாக வந்து பாடம் கற்பிக்கும் என்று எல்லோரும்பேசிக்கொண்டே இருந்த போதே.....
ஜெயா.......
அழிப்பான்களால் உறவுகள் அழிவதில்லை அப்படி நடப்பின் மனித இனமே அழிந்து விடும்.