பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
ஏங்கித் தவிக்கும் எண்ணங்கள்
பூப்பெய்தியப் புதுப் பெண்ணைப்போல்
வெட்கித்தலை குனியாமல்
கள்குடித்தக் களிறுபோல்
பிளிறி பிளந்தெழுந்து
உத்வேகத்துடன் உந்தி வருகிறது;
மஞ்சள் பூசி பாலில் குளித்து
புதுமணப்பெண்போல் பூச்செண்டணிந்து
மங்கள நாதமுழங்க பூரித்து பொங்கியெழுந்து
குதூகலுத்துடன் யாவரும்
ஆரவாரத்துடன் முழங்க
பொங்கி விட்டது பொங்கலோ பொங்கல்!
சம்பத் குமார், கல்கத்தா