கன்னக் கதுப்பை கனிரச செம்மலர்க் கிண்ணமென்பேன்

புன்னகைப் பூவெடுத்துப் பாவாய் தொடுத்திடுவேன்
மின்னல் விழியுனை மேனகையாய் காட்டிடுவேன்
கன்னக் கதுப்பை கனிரசக் கிண்ணமென்பேன்
உன்னையென தென்பேன் உவந்து

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

புன்னகைப் பூவெடுத்துப் பாவாய் தொடுத்திடுவேன்
மின்னல் விழியினின் மேனகையே --சின்னவளே
கன்னக் கதுப்பை கனிரசக் கிண்ணமென்பேன்
உன்னையென தென்பேன் உவந்து


----ஒரு விகற்ப நேரிசை வெண்பா + எதுகை மோனைப் பொலிவுடன்

புன்னகை மென்பூவால் பாவாய் உனையே தொடுத்திடுவேன்
மின்னல் விழியுனை காட்டுவேன் வானத்து மேனகையாய்
கன்னக் கதுப்பை கனிரச செம்மலர்க் கிண்ணமென்பேன்
உன்னை யெனதென்பேன் அன்பில் உயிரென்பேன் உண்மையிலே

----இப்பொழுது ஐஞ்சீர் கட்டளை கலித்துறை
--முதல்சீர் அடி எதுகை புன் மின் கன் உன்
1 5 ஆம் சீர் மோனை-- பு தொ, மி மே, க கீ .உ உ .

இப்பாவினத்திற்கு சிறந்த தொன்னூல் எடுத்துக்காட்டு அபிராமி அந்தாதி

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-24, 6:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே