பொங்கல்
. 🍚 *பொங்கல்* 🍚
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
ரேசன் என்ற வயல் வெளியில்
அறுவடை செய்யும் தமிழர்கள்
வெற்றுப் பையோ களம் கண்டது
ஒற்றை கிலோ பச்சரிசி...
இதற்கு இணையாய் சர்க்கரையும்
இணைந்து விளைந்த பெரு விளைச்சல்
உழவன் அறியாக் கலாச்சாரம்
ஒற்றைக் கரும்பில் வழிபாடு...
அரசு பட்ட கடனும் கடந்து
ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு
நான்கு நாட்கள் சிவப்பாய் காட்டி
நாட்காட்டி சிந்தும் புன் சிரிப்பு...
அடுத்த ஆண்டு இன்னும் எளிதாய்
பொங்கியே கொடுக்குதாம் பொங்கலை அரசு
உழைத்த கணக்கை அட்டையில் பார்த்தால்
சளைத்தவனல்ல தமிழன் என்போம்...
ஆ...........
அங்கே என்ன அவ்வளவு கூட்டம்
அருகில் சென்று சற்றதை பார்ப்போம்
ஓ..... ....
நாளைய பிணங்கள் இன்றே உறங்குது
நூறு நாள் வேளையில் சுடுகாட்டில்.,
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
