தேனாய் வந்த தை

********************
மார்கழியின் பூம்பனியை மார்பில் சூடி
மணக்குமெழில் பூக்களினை மனத்தி லேந்தி
காரிருளை நீக்கிவரும் காலை வேளை
களங்கமிலா மழலையெனக் கவிதை பேசி
வார்த்தெடுத்த அச்சுவெல்லம் வாங்கிக் கொண்டு
வனைந்தநற் பானையினை வாகாய் பொங்க
தேரூர்ந்து வருவதுபோல் திசைக ளெட்டும்
தென்றலெனத் தைமகளும் தேனாய் வந்தாள்.
*
நண்பர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jan-24, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 140

மேலே