உழவனை காப்போம்
உழவனை காப்போம்.
13/01/24
புள்ளி வைத்து கோலமிட்டு
பூமாலை தோரணம் கட்டி
புதுப்பானை அடுப்பில் ஏற்றி
மஞ்சள்கொத்தை பானையில் சுற்றி
புத்தரிசி பொங்கலிட்டு
செங்கரும்பு கலசம் கட்டி
செங்கதிரோன் தோன்றும் காலை
பொங்கலோ பொங்கலென்று
பொங்கிடும் மகிழ்வுதனை
சூரிய பொங்கலில்
தைமகள் தந்தாள் - அத்
தைமகள் வந்து வாழ்வில்
வளமும் நலமும்
வாரியே தந்தாள்.
தையல் மகள் தந்ததெல்லாம்
புதையல் போல மண்ணுக்குள்
புதைந்தே கிடக்குது.
புதையல் தேடி நிதமும்
நிலத்தை உழுத்திடு - வியர்வை
சிந்தி நாளும் உழைத்திடு
என்ற சிந்தனையை நம்
சிந்தையில் விதைத்திட்டாள்
அத் தைமகள்.
உறுதியோடு ஏரின் பின் செல்வோம்.
இறுதிவரை ஆரோக்கியமாய்
வாழ்ந்திட உறுதிமொழி எடுப்போம்
உழவினை போற்றுவோம் - நம்
உழவனை காப்போம்.