தமிழோடு தகராறு
"நாய்கள் ஜாக்கிரதை "- என்ற பெயர்ப்பலகை
நாய்கள்தானே ஜாக்கிரதை என வீட்டுக்குள் நுழைத்தேன்
நாய்கடி பட்டதுதான் மிச்சம்
நடந்தேன் கொஞ்ச தூரம்
அங்கெ என்ன கூட்டம்
"மரம் நடும் விழா"- என பெயர்ப்பலகை
செடியை நட்டு கொண்டிருந்தார்கள்
வீடு நோக்கி நடந்தேன்
பக்கத்துக்கு வீட்டுக்காரர்
"வீட்டோடு திருப்பதிக்கு போறோம் என்றார் "
வீடு அங்கேதான் இருந்தது
வீட்டுக்குள் நுழைந்தேன்
எங்கடா போன
"தீபாவளிக்கு சட்டை வாங்கி வந்துருக்கேன்"போட்டு பாரு
அப்பா எனக்கு வாங்கலையா-
மனதுக்குள் வினா
உறக்கம் வராமல் அண்ணனிடம் கேட்டேன்
இப்படி கேக்குறதுனாலதான் உன்னை பார்த்து
"ஊர் சிரிக்குது " என்றான்
நடுநிசி அமைதியில் ஊர் சிரிக்கும் ஒலி
இன்னும் கேட்கவில்லை
வைரா