பக்திபயம் பணிவு ஒழுக்கம்
கோயிலிலா ஊரில் குடியிருத்தல் கூடாவாம்
கோயி லிருக்கபக்தி கூடுமாம் -- தாயினுடன்
கோயில் நுழைந்தவன் கும்பிட்டு நீர்பூச
வாயில் திறக்குமாம் வான்
கோயிலில் ஐயர் கொடுத்த்நீரை நெற்றியில்
நீயிட பக்திவரும் நெஞ்சினில் -- ஞாயிராய்
நீங்கா பயமும்பின் நிற்கும் ஒழுக்கமுந்தான்
ஓங்கும் பணிவை உணர்
கோயில் இல்லா ஊரில் நீகுடி
யிருக்காதே சொன்னது ஒளவையாம் காரணம்
அழியும் பக்தியும் பயமுடன் ஒழுக்கம்
என்றே சாமியும் ஒழிந்தால் பக்தியும்
ஒழுக்கமும் ஒன்றாய் கெடுமென பெரியார்
கூடா கோயில் கடவுள் பக்தி
எனப்புளுகி நம்முடை தமிழரை
பொறுக்கி கும்பலாய் மாற்றி விட்டானே
.......