பரிந்துரை யிதுதான் ஐயா பாவலர் ஏற்பீர் நன்றே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
புரிந்துமே நல்ல பாடல்
..போற்றிடும் வகையிற் றானே
தெரிவுட னெழுதல் வேண்டுந்
..தித்திப்பாய்ப் பொருளும் வைத்துக்
கருத்துமே சிறப்பாய் வைத்துக்
..கனிவுடன் சொல்ல வேண்டும்
பரிந்துரை யிதுதான் ஐயா
..பாவலர் ஏற்பீர் நன்றே!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
