அன்புள்ள காதலனே
அன்புள்ள காதலனே !!
———
அன்புள்ள காதலனே
ஆசையின் நாயகனே /
கன்னலாய் இனிப்பவனே
கன்னியை ஈர்த்தவனே /
எண்ணத்தில் இருப்பவனே
இதயத்தில் துடிப்பவனே /
மண்ணிலே முளைப்பவனே
மனதிலே நடிப்பவனே /
கள்ளர்கள் மத்தியிலே
கனிவாய் நடப்பவனே /
உள்ளத்தில் பதிந்தவனே
உருவத்தில் உயர்ந்தவனே /
எனக்காய்ப் பிறந்தவனே
இயலிசை வல்லவனே /
தனக்காய் வாழாமல்
துணைக்காய்த் தொடர்பவனே /
மாறிடா மாமகனே
மங்கையின் மன்மதனே /
வேறிடம் இல்லையடா
விரைவினில் வந்திடடா !!
-யாதுமறியான்.

