என் கவிதையின் காதல்
வலிகளுக்காக வார்த்தை தேடி
உணர்வுகளுக்கு உரு கொடுத்து
சொல்ல வந்ததை சொல்லி முடித்து
சுய சூளுரை அதில் உறைத்து
எட்டுத்திக்கும் என் கவிதை
எட்டி நடக்கும் என எத்தனிதது
பறை ஒலித்து முரசு கொட்ட
என்றாவது ஒரு நாள்...
நிச்சயம் கேட்கும் என் பாடல்....
அப்போது புரியும் என் கவிதையின் காதல்

