திருமால் துதி ---இன்னிசை வெண்பா
தாமரைக்கண் ணாஎந்தாய் தாமோத ராகண்ணா
நாமமாயி ரத்தோனே நாரணனே நாதனே
வாமனனாய் வந்து உலகளந்த உத்தமனே
நின்தாள் சரணடைந்தேன் நான்