எது வேண்டும் சொல் மனமே
எது வேண்டும் சொல் மனமே!!
(இது மரபுக்கவிதை அன்று)
பஞ்ச மில்லாத நாடு வேண்டும்
வஞ்சி அழகைப் பருக வேண்டும்
மஞ்ச மதில் மகிழ வேண்டும்
பஞ்ச ணையில் உறங்க வேண்டும்
ஊஞ்சலிலே ஊசலாடி மகிழ வேண்டும்
கொஞ்சும் மழலை கேட்க வேண்டும்
பிஞ்சிலே கல்வி சிறக்க வேண்டும்
நெஞ்ச மதில் நிம்மதி வேண்டும்
அஞ்சாப் பெரும் வீரம் வேண்டும்
வஞ்ச மில்லாத தோழமை வேண்டும்
லஞ்சமில்லா நல் அரசு வேண்டும்
தஞ்சம் புகுந்தோரைக் காக்க வேண்டும்
கிஞ்சித்தும் கடனின்றி வாழ வேண்டும்
கஞ்சனென்ற பேரின்றி ஈதல் வேண்டும்
கொஞ்சமாவது கருணை காட்ட வேண்டும்
எஞ்சிய நாளில் அமைதி வேண்டும்!!