அமைதி பழகு

சாத்திரங் கள்பல கற்றும் எளிதில்நீ
ஆத்திரம் கொள்வது நன்றல்ல - நாத்திறன்
கொண்ட அறிஞர்தம் கூற்றை மனமதில்
கொண்டே அமைதி பழகு.


(இரு விகற்ப நேரிசை வெண்பா)

எழுதியவர் : உதய நிலவன் (5-Feb-24, 6:04 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 89

மேலே