பூத்து குலுங்குகிறாய்

பூத்து குலுங்குகிறாய்.
09 / 02 / 2024
கவி என்றால் இயல்
அதில்
இசையை தைத்தால்
கவிதை ஆகிறது.
பாவத்தை இணைத்தால்
நாடகமாகிறது.
இவை மூன்றும் இணைந்தால்
முத்தமிழ் ஆகிறது.
தமிழே...!
வேர்கள் மூன்றும்
ஆழ்ந்து இணைந்து
ஒன்றாய் உறுதியாய்
இருப்பதால்தான்
இன்னமும் நீ
விழுதுகள் தாங்க
வீழ்ந்துவிடாமல்
பூத்து குலுங்குகிறாய்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Feb-24, 6:00 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 350

மேலே