முருகர் துதிப்பாடல்கள்

முருகர் துதிப்பாடல்கள் 9.2.2024

ஆனை முகத்தா அருள்புரிவாய் பாவடிக்க
வீணை சரஸ்வதியே காப்பு


புவனையின் புதல்வா ஓடிவா.

(1)
வேங்கை மரமாகி நின்றவடி வேலனே
தாங்க வருவாய் தனிகைவாசா -- தீங்கு
புரிந்தவெனைக் காரு புவனைப் புதல்வா
கரிமு கனிளையோனே கார்

(2)
வண்ணங்கள் சொல்ல வகையை யறியாதே
கண்ணைக் கவர்மயில் வாகனனே -- எண்ணத்தின்
வேகத்தில் வந்தெனைக் காத்திடு வேலாவென்
சோகமொழி மந்திரம் சொல்


...

எழுதியவர் : பழனி ராஜன் (9-Feb-24, 5:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 82

மேலே