குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

(இ-ள்) பிரியேனென்றது கேட்டு மகிழ்ந்த தலைவிக்குத் தலைவன் பின் பிரிந்து வருவேனென்று கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

நீங்கே னுனையொரு போதுமின் னேயன்றி நீங்கிலுயிர்
தாங்கேன் வருவதுந் தாழ்ச்சிசெ யேன்றட மார்பிடத்துப்
பூங்கே கயத்தன் குலோத்துங்க சோங்ழன் புகார்வரைவா
யாங்கே நிலாமுகிக் குண்டோ நிலாவிடுத் தாரிடமே! 27

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (10-Feb-24, 8:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே