நன்மதி வெண்பா - நூல் - பாடல் 25
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தேசவிருஞ் செம்பொன்மணிச் சிங்கா தனத்துமிசை
ஏசவரு நாயதனை யேற்றியே - நேசமுடி
சூட்டுகினு மந்தச் சுணங்கன் குணங்கெடுமோ
தேட்டமுறு நன்மதியே செப்பு! 25

